நாச்சியார் படத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா.!
நாச்சியார் படத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா.!
By : Kathir Webdesk
இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீராங்கனையும், ஆங்கிலேயரை எதிர்த்த முதல் இந்திய ராணி என்ற பெருமையும் கொண்ட ’வேலு நாச்சியார்’ வாழ்க்கை வரலாற்று படத்தை, சுசி கணேசன் இயக்க வேலு நாச்சியாராக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளார் என்ற தகவல் பரவியது.
இதற்கு நடிகை நயன்தாரா தற்போது விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்: அதில் குறிப்பிட்டுள்ளதாவது: ராணி வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்று ஊடகங்களில் சில தகவல்கள் பரவி வருகின்றன. நயன்தாரா அப்படத்தில் திட்டவட்டமாக நடிக்கவில்லை.
அவரது கருத்தை நாங்கள் இந்த அறிக்கை மூலம் ஊடகங்களுக்கு பகிர்கிறோம். இது ஒரு ஆதாரமற்ற வதந்தி. ஊடகங்கள் இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு உண்மைகளை சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார்.
ஏற்கெனவே நயன்தாரா காஷ்மோரா, சைரா நரசிம்ம ரெட்டி படங்களில் ராணி வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.