Kathir News
Begin typing your search above and press return to search.

ராக்கி படம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடும் நயன்தாரா, விக்னேஷ் சிவன்.!

தரமணி படத்தின் மூலமாக பிரபலமானவர் வசந்த் ரவி. இவர் தற்போது ‘ராக்கி’ படத்தில் நடித்துள்ளார். இதனை அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

ராக்கி படம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடும் நயன்தாரா, விக்னேஷ் சிவன்.!

ThangaveluBy : Thangavelu

  |  1 Jun 2021 12:39 PM GMT

தரமணி படத்தின் மூலமாக பிரபலமானவர் வசந்த் ரவி. இவர் தற்போது 'ராக்கி' படத்தில் நடித்துள்ளார். இதனை அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.




இப்படத்தை திரையரங்கில் வெளியிடுவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை காரணமாக திரையரங்குகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டிருந்தது. இதனால் படத்தை ஓடிடி-யில் வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது. இது பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், ராக்கி படம் குறித்து நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என கூறப்படுகிறது.

அனேகமாக ஓடிடியில் படத்தை வெளியிடுவதற்கும் வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News