நயன்தாரா-விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு.!
நயன்தாரா-விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு.!
By : Amritha J
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் விக்னேஷ் சிவன். மேலும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுவார் நயன்தாரா.இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் திருமண அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.அந்த வகையில் இவர்கள் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர் நிறுவனத்தின் அடுத்த படத்தை குறித்த முக்கிய தகவலை ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது 'ரவுடி பிக்சர்ஸ்' என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 'நெற்றிக்கண்', 'கூழாங்கல்' என இரண்டு படங்கள் தயாரித்து அதில் கூழாங்கல் படத்திற்கு சமீபத்தில் நியூசிலாந்து விருது கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.இதேபோல செவன் ஸ்கிரீன் நிறுவனத்துடன் இணைந்து 'காத்து வாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தையும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
மேலும் ரவுடி பிக்சர்ஸின் அடுத்த பட தயாரிப்பு குறித்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது. Walking/Talking STRAWBERRY ICECREAM எனப் பெயரிடப்பட்டு உள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விநாயக் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
We are happy to be introducing our upcoming project called #WalkingTalkingStrawberryIcecream. If the name sounds quirky to you, wait till you watch the film!!
— Rowdy Pictures Pvt Ltd (@Rowdy_Pictures) February 16, 2021
A @vinayakv_ directorial pic.twitter.com/jxh4SsN6xo