என்.டி.ஆர் நூற்றாண்டு விழா - கோலாகலமாக கொண்டாட தெலுங்கு திரையுலகம் முடிவு
தெலுங்கு சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்.டி.ஆர் என்கின்ற நந்தமூரி தாரக ராமாராவ் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது.

தெலுங்கு சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்டிஆர் என்கின்ற நந்தமூரி தாரக ராமாராவ் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது.
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்.டி.ராமராவ் அவர்களின் பிறந்தநாள் வருகின்ற மே 28ஆம் கொண்டாடப்படவிருக்கிறது. அன்றைய தினம் அவருக்கு 99 வயது முடிந்து 100 வயது தொடங்குகிறது. இந்த நிலையில் என்.டி.ஆர் நூற்றாண்டு விழாவை ஆந்திரா தெலுங்கானாவில் ஓராண்டுக்கு கொண்டாட முடிவு செய்திருக்கிறார்கள். முதல் நிகழ்ச்சி என்.டி.ஆரின் மகனும் 100 படங்களுக்கு மேல் நடித்த நடிகருமான என்.டி.பாலகிருஷ்ணன் துவங்கி வைக்கிறார் இந்த நிகழ்ச்சி அவரது சொந்த ஊரான நிம்மகுருவில் நடக்கிறது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசின் சார்பிலும் நிகழ்ச்சி நடப்பதால் அன்றைய தினம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள திரையரங்குகளில் என்.டி.ஆர் நடித்த படங்களை திரையிட இருக்கிறார்கள், மேலும் தெலுங்கு திரையுலகமும் விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள்.