தர்ஷனுக்கு எதிராக சனம் ஷெட்டியின் வழக்கில் உயர்நீதிமன்றத்தின் புதிய உத்தரவு..!
தர்ஷனுக்கு எதிராக சனம் ஷெட்டியின் வழக்கில் உயர்நீதிமன்றத்தின் புதிய உத்தரவு..!
By : Amritha J
பிக்பாஸ் சீசன்-3 என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு பிரபலமான போட்டியாளர்களில் ஒருவராக அறிமுகமானவர் தர்ஷன் தியாகராஜா. இலங்கையைச் சேர்ந்த மாடல், நடிகராக மாறினார். அவர் சில தமிழ் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போது, பிக்பாஸ்-4 போட்டியாளர் ஆன சனம் ஷெட்டி சமூக வலைத்தளங்களான டுவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றில் தர்ஷனுக்கு ஆதரவாக பேசி வந்தார்.
ஏற்கனவே தர்ஷன் மற்றும் சனம் செட்டி ஆகிய இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இச்செய்தியை பற்றிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக பகிரப்பட்டது. ஆனால் பிக்பாஸ்-3 முடிவுக்கு பிறகு, தர்ஷன் அவர்கள் நிச்சயதார்த்தம் செய்ததை ஏற்றுக்கொண்ட போதிலும், சனத்தை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். மேலும் சனம், தர்ஷன் மீது 3 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்திருந்தார்.
ஷனம் ஷெட்டியின் புகாரை தொடர்ந்து தர்ஷன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் பிக் பாஸ் தர்ஷன் தனது முன்ஜாமீன் வழங்கவேண்டும் என்று மனுதாக்கல் செய்திருந்தார்.
இவரின் மனுவை ஏற்று உயர் நீதிமன்றம் இவருக்கு முன் ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் ஒரு வாரத்துக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும் என்றும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.