Kathir News
Begin typing your search above and press return to search.

பிக் பாஸ் நிஷாவை பற்றி குற்றச்சாட்டை எழுப்பிய நிஷாவின் கணவர்.!

பிக் பாஸ் நிஷாவை பற்றி குற்றச்சாட்டை எழுப்பிய நிஷாவின் கணவர்.!

பிக் பாஸ் நிஷாவை பற்றி குற்றச்சாட்டை எழுப்பிய நிஷாவின் கணவர்.!
X

Amritha JBy : Amritha J

  |  27 Nov 2020 10:30 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் ஒருவராக திகழ்பவர் நிஷா. தற்போது அடுத்தவர்களை சார்ந்தும், வெள்ளந்தியாகவும் போட்டியை விளையாடி வருகிறார். மேலும் எதைச் சொன்னாலும் நம்பி விடுவது பாசத்திற்காக ஏங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்பது போட்டியாளர்களின் கருத்து.

இந்த நிலையில் நிஷாவின் கணவர் ரியாஸ் அளித்த பிரத்யேக பேட்டியில் என்னை பொருத்தவரை நிஷா இன்னும் விளையாட்டை ஆரம்பிக்கவே இல்லை என்று கூறினார். ரியோவுக்காக காத்திருந்து சாப்பிடுவதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை என்றும் நமக்கு பசித்தால் நாம் சாப்பிட வேண்டியதானே என்றும் அவர் கூறினார்.

மேலும் அவர் கூறியது பிக்பாஸ் வீட்டிற்கு அவர் போகும்போது எனக்கும் நிஷாவுக்கும் பிடித்த பிங்க் கலர் நைட்டியை நான் தான் அவருக்கு தெரியாமல் சூட்கேஸில் வைத்தேன் என்றும், நைட்டி வேண்டாம் என்று தான் நிஷா கூறினார் என்று காமெடியாக கூறினார்.

அதனை அடுத்து நிஷாவின் பாசம் போலி என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன், அவர் உண்மையாகவே எல்லோரிடமும் பாசத்தை பொழிவார் என்றும் கூறிய ரியாஸ், பிக்பாஸ் வீட்டில் ரியோ மட்டும் தான் அவருக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால் தம்பி என்ற முறையில் அவரிடம் பாசம் காட்டுவதாகவும், ஆனால் ரியோ அவருடைய விளையாட்டை சரியாகத்தான் விளையாடுகிறார் என்றும் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News