Kathir News
Begin typing your search above and press return to search.

இனி தளபதி 67 அப்டேட் தான் - ரசிகர்களை உற்சாகப்படுத்தப்போகும் லோகேஷ் கனகராஜ்

அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் துணிவு படம் மற்றும் விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படமும் வெகு வெகு விமர்சியாக திரையரங்குகளில் வெளியானது.

இனி தளபதி 67 அப்டேட் தான் - ரசிகர்களை உற்சாகப்படுத்தப்போகும் லோகேஷ் கனகராஜ்

Mohan RajBy : Mohan Raj

  |  13 Jan 2023 1:13 AM GMT

அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் துணிவு படம் மற்றும் விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படமும் வெகு வெகு விமர்சியாக திரையரங்குகளில் வெளியானது. அஜித் மற்றும் விஜய் நடிகர்களின் ரசிகர்கள் மட்டுமல்லாது பல திரை பிரபலங்களும் சிறப்பு காட்சிகளை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்தனர்.




இந்நிலையில் ரசிகர்களுடன் சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாரிசு படத்தை பார்த்த பிறகு தளபதி 67 படம் குறித்து கூறியதாவது, வாரிசு படத்தின் ரிலீஸுக்காக காத்திருந்தேன். இதன் பிறகு அப்டேட்கள் வரும் என்று கூறியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.




மேலும் விரைவில் தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். த்ரிஷா கதாநாயகியாக தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News