Kathir News
Begin typing your search above and press return to search.

பிக்பாஸில் இன்று வெளியேற போகும் நபர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

பிக்பாஸில் இன்று வெளியேற போகும் நபர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

பிக்பாஸில் இன்று வெளியேற போகும் நபர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
X

Amritha JBy : Amritha J

  |  8 Nov 2020 9:01 PM IST

பிக்பாஸ் சீசன்-4 கோலகலமாக ஆரம்பிக்கப்பட்டு பல வாரங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் நாமினேசன் செய்யப்பட்டவர்களில் குறைவான வாக்குகள் பெற்றவர் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த வாரம் வெளியேற்றப்படுபவர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இந்நிலையில் அனிதா, பாலாஜி, சனம், சோம் சேகர், சுரேஷ், அர்ச்சனா ஆகிய நாமினேட் செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் ஒருவர் வெளியே செல்ல இருக்கிறார். வாரத்தின் முதல் மூன்று நாட்களில் அர்ச்சனை குறைவான வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால் தற்போது சுரேஷ் சக்ரவர்த்தி குறைவான வாக்குகள் பெற்று வெளியேற போகிறார். மேலும் சுரேஷால் அதிக சண்டைகள் வரும் என்பதால் அவர் சீக்ரெட் அறையில் இருப்பார் என தெரியவந்துள்ளது.

அதன்படி இன்று வந்த ப்ரோமோவில் கமலஹாசன் சுசித்ராவை கேள்வி கேட்பதுபோல ப்ரோமோ முடிந்தது. அது ஏனென்றால் சுசித்ரா வீட்டினுள் வந்த பின்பு ரியோ நீங்கள் சொல்லிக் கொடுப்பதை நிஷா அப்படியே செய்கிறார் என்றும் நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருப்பது போன்று வெளியில் மக்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர் அதை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். இதையே கமலஹாசன், சுசித்ராவை பார்த்து இது உண்மை இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.இன்றைய நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதை பார்த்த பல நெட்டிசன்களும், ரசிகர்களும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News