Begin typing your search above and press return to search.
தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

By :
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வந்த படம் கர்ணன். இப்படத்தின் படப்பிடிப்புகள், புரொடக்ஷன் பணிகளும் சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது எனவும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ராஜிஸா விஜய்,லால், யோகிபாபு, லட்சுமி ப்ரியா கௌரி கிஷன் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் பல முக்கிய கதாபாத்திரங்கள் இதில் இடம் பெற்று வருகின்றனர்.இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தோனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பான ரிலீஸ் தேதி இன்று காலை 11 மணியளவில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து இருக்கிறார். அந்த பதிவில் தனுஷின் ’கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் தியேட்டரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, புதிய அட்டகாசமான போஸ்டர்களும் வெளியாகி உள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த பதிவை வைரலாகி வருகின்றனர்.
#Karnan is set to conquer the theatres all over the world from April 2021 @dhanushkraja @mari_selvaraj @Music_santhosh @KarnanTheMovie #KarnanArrivesOnApril pic.twitter.com/qmZ8ggNv7U
— Kalaippuli S Thanu (@theVcreations) January 31, 2021
Next Story