பிறந்த நாளில்.. பலவிதமான கெட்டப்புகளில் ரசிகர்களை சந்தித்த ரஜினி.!
பிறந்த நாளில்.. பலவிதமான கெட்டப்புகளில் ரசிகர்களை சந்தித்த ரஜினி.!

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்ற நடிகர் ரஜினி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது இல்லமான போயஸ் கார்டனுக்கு ரஜினி போன்று பல கெட்டப்புகளில் அவரது ரசிகர்கள் வருகை தந்தனர். நடிகர் ரஜினிகாந்த் 1950 ஆம் ஆண்டு, டிசம்பர் 12 ஆம் தேதி பிறந்தார்.
தமிழ் ரசிகர்களால் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று கொண்டாடப்பட்டு வருகிறார். கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான ’அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். அன்றிலிருந்து இன்றுவரை அவருக்கான இடம் உச்சத்திலேயே இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் 70ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் ரஜினி ரசிகர்கள் நள்ளிரவு முதலே குவிய தொடங்கினர்.
குறிப்பாக ரஜினி இதுவரை நடித்த பிரபல கதாபாத்திரங்களை ரஜினி ரசிகர்கள், வேடமிட்டு அவரை போன்று நடித்து வருகின்றனர். இது அங்கிருப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பாட்ஷா ரஜினி, அண்ணாமலை ரஜினி, எந்திரன் ரஜினி என பல கெட்டப்புகளில் ரஜினிக்கு வாழ்த்து கூறுவதற்காக வந்திருந்தனர். இந்த படம் மற்றும் வீடியோக்கம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.