நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் படம் OTT-யில் வெளியிட முடிவு.?
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் படம் OTT-யில் வெளியிட முடிவு.?
By : Kathir Webdesk
கொரோனா ஊரடங்கு காரணமாக பல முன்னணி நடிகர்கள், நடிகர்களின் படங்கள் OTT- யில் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திரைப்படமும் வெளியாக உள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ரதீந்திரன் பிரசாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "பூமிகா". பெண்களை மையப்படுத்தப்பட்ட இந்த படத்தில் நாயகியாக 'ஐஸ்வர்யா ராஜேஷ்' நடித்துள்ளார். இந்த படம் இவரின் 25வது படமாகும். தற்போது கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருப்பதினால் பெரிய படங்களே OTTக்கு வியாபாரமாகி வரும் நிலையில், "பூமிகா" படத்தையும் ஓடிடியில் விற்க முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.
இப்படத்தை OTT நிறுவனமான நெட்பிளிக்ஸ் படத்தை வாங்க உள்ளது. பூமிகா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. குறிப்பாக இப்படம் பெண்களை மிகவும் கவரும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்களும், நெட்டிசன்கள் அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.