தீபாவளிக்கு OTT-யில் ரிலீஸாகும் முக்கிய 4 படங்கள் எவை தெரியுமா?
தீபாவளிக்கு OTT-யில் ரிலீஸாகும் முக்கிய 4 படங்கள் எவை தெரியுமா?
By : Kathir Webdesk
கொரோனா காரணமாக பல படங்கள் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில் அப்படங்கள் OTT மூலமே வெளியாக உள்ளன.
கொரோனாவினால் சினிமா படப்பிடிப்பு தொடங்கினாலும், திரையரங்குகள் மூடப்பட்டு தான் உள்ளது. இதனை உடனடியாக திறப்பதற்கான முயற்சியில் சினிமா துறையினர் உள்ளனர். கொரோனாவின் பாதிப்பினால் 6 மாதங்கள் மூடப்பட்டுள்ள தியேட்டர்கள் வேறு சில மாநிலங்களில் திரந்துள்ளனர். கிட்டதட்ட வருடத்திற்கு 300 படங்களுக்கு மேல் வெளியிடும் தமிழ் திரைப்பட வர்த்தகத்தை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் முக்கிய பிரபலங்களின் படங்கள் OTT மூலமே வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் தீபாவளிக்கு வெளியாகும் படங்கள்: சூரரை போற்று, மூக்குத்தி அம்மன், மாயாபஜார், அந்தகாரம் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளன.
அதன் பின்பு விஷாலின் சக்ரா, ஜெயம் ரவியின் பூமி, சந்தானத்தின் டிக்கிலோனா, ரைசா வில்சன் நடித்துள்ள சேஸ் மற்றும் மேலும் சில படங்களும் இணைய ரிலீஸ் நோக்கி உழைத்துக்கொண்டு இருக்கிறார்களாம். விரைவில் லிஸ்ட் பெரிதாகும் என்று தெரிய வந்துள்ளது.
இதை அறிந்த ரசிகர்கள் ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும், தியேட்டரில் பார்ப்பது போல வருமா என்று வருத்தத்திலும் இருக்கின்றனர்.