ஓ.டி.டி மூலம் மீண்டும் களத்தில் இறங்கும் வைகைப்புயல் !
Vaigaipuyal re-entry.

வைகைப்புயல் வடிவேலு விரைவில் ஓ.டி.டி தளத்தின் மூலமாக மறுஅவதாரம் எடுக்கவிருக்கிறார்.
கடந்த 2011'ம் ஆண்டு தி.மு.க'விற்காக களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்தார் வைகைப்புயல் வடிவேலு, இதனையடுத்து கடந்த பத்து ஆண்டுகளாக சினிமா'வில் சரியான வாய்ப்புகள் இன்றி ஒதுங்கியே இருந்தார். ஆனால் இன்றும் காமெடி சேனல் மற்றும் மீம் டெம்ப்ளேட்களில் வடிவேலு இன்றி ஒருநாளும் இராது. அந்தளவிற்கு தமிழகத்தில் ஒவ்வோரு குடும்பத்திலும் உறுப்பினராக வடிவேலு திகழ்ந்தார்.
இந்நிலையில் மீண்டும் ஓ.டி.டி தளம் மூலம் வைகைப்புயல் காமெடி நடிகர் அவதாரமாக வலம் வர இருக்கிறார். தெலுங்கில் பிரபலமாக இருக்கும் ஓ.டி.டி தளம் 'ஆஹா'. இந்நிறுவனம் விரைவில் தமிழகத்தில் அறிமுகமாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் முதன்மை நிகழ்ச்சியாக வடிவேலுவை வைத்து காமெடி நிகழ்ச்சி ஒன்றை தயாரித்து வெளியிட இருக்கிறார்கள் நிறுவனத்தார். இதன் மூலம் வைகைப்புயல் மீண்டும் தமிழகத்தில் நிலைகொள்ள இருக்கிறது.