Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க பிரச்சார படத்தை எடுத்ததற்கு அ.தி.மு.க சார்பில் பா.ரஞ்சித்துக்கு நோட்டீஸ் !

Cinema News.

தி.மு.க பிரச்சார படத்தை எடுத்ததற்கு அ.தி.மு.க சார்பில் பா.ரஞ்சித்துக்கு நோட்டீஸ் !

Mohan RajBy : Mohan Raj

  |  17 Aug 2021 8:00 AM GMT

சார்பட்ட பரம்பரை இயக்குனர் பா.ரஞ்சித்'ற்கு அ.தி.மு.க சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.





பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி நடித்த படம் 'சார்பட்டா பரம்பரை' இந்த படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற அரசியல் சார்ந்த காட்சிகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. அதாவது, தி.மு.க கட்சியின் தொண்டர்கள் நல்ல முறையில் நடந்து கொள்வது போலவும், அ.தி.மு.க தொண்டர்கள் சாரயம் காய்ச்சுவது, சண்டையிட்டு அடிதடி வரை செல்வது போன்ற ரவுடியிசத்தில் ஈடுபடுவது என அ.தி.மு.க தொண்டர்களை படு இழிவாக காண்பித்திருந்தனர்.





அதேசமயம் எம்.ஜி.ஆரை'ப்பற்றிய காட்சிகள் இல்லாததை சுட்டிக்காட்டி அப்போதே அ.தி.மு.க'வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் தி.மு.க'வின் பிரச்சார படம் போல் இருப்பதாகவும், உண்மைக்கு புறம்பான காட்சிகள் உள்ளதாகவும் எதிர்ப்புக்குரல் கொடுத்தார்கள். இந்நிலையில் தற்போது சார்பட்டா பரம்பரை படத்தில் உண்மைக்கு புறம்பான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், அதை ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் பா.ரஞ்சித் மீது சட்டரீதியான நடவடிக்கை பாயும் என்றும் அ.தி.மு.க சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


Source - தினமலர்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News