பாபநாசம் 2ம் பாகத்தில் கமலுடன் இணைகிறாரா நதியா.?
மலையாளத்தில் மோகன்லால் மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
By : Thangavelu
மலையாளத்தில் மோகன்லால் மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து இந்தப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அதே போன்று தமிழில் பாபநாசம் என்ற பெயரில் நடிகர் கமல் மற்றும் நடிகை கௌதமி வைத்து ரீமெக் செய்யப்பட்டு நல்ல வசூலை எடுத்தது.
இந்நிலையில், பாபநாசம் 2ம் பாகத்தில் நடிக்க கமல் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக கௌதமி நடித்திருந்தார். தற்போது இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ள நிலையில், அவருக்கு பதிலாக மீனா நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியது.
ஆனால், தற்போது நதியா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. யார் நடிப்பது என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரியவரலாம்.