ஏ.ஆர்.ரகுமான் முன்னிலையில் மைக்கை விட்டெறிந்த பார்த்திபன்
பட நிகழ்ச்சி ஒன்றில் ஆத்திரமடைந்து நடிகர் பார்த்திபன் மைக்கை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட நிகழ்ச்சி ஒன்றில் ஆத்திரமடைந்து நடிகர் பார்த்திபன் மைக்கை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் பார்த்திபனின் 'இரவின் நிழல்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சேத்துப்பட்டில் நேற்று நடைபெற்றது. இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொண்டு கலந்து கொண்டு முதல் பாடலை வெளியிட்டார். அப்பொழுது பார்த்திபன் பேசுகையில் மைக் சரியாக வேலை செய்யாததால் அதனை வேகமாக மேடையிலிருந்து வீசி எறிந்ததால் விழாவில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அந்த விழாவில் பேசிய ஏ.ஆர்.ரகுமான் கூறியதாவது 'பார்த்திபன் இயக்கிய 'இரவின் நிழல்' திரைப்படம் மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் வெளியாகி இருந்தால் உலகமே கொண்டாடும் வகையில் இருக்கும், தமிழ் திரை உள்ள பலருக்கு பல திறமைகள் உள்ளன நாம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்' என பேசினார்.