மைக் சர்ச்சையை முத்தத்தால் முடித்து வைத்த பார்த்திபன்
'இரவின் நிழல்' பட படவிழாவில் மைக்கை வீசி எறிந்து சர்ச்சையை ஏற்படுத்திய பார்த்திபன் இப்பொழுது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

'இரவின் நிழல்' பட படவிழாவில் மைக்கை வீசி எறிந்து சர்ச்சையை ஏற்படுத்திய பார்த்திபன் இப்பொழுது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பார்த்திபன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் 'இரவின் நிழல்' பட விழா சமீபத்தில் நடந்தது. இப்படத்தில் விழாவில் நடிகர் ரோபோ சங்கர் மீது பார்த்திபன் மைக்கை வீசி எறிந்த சம்பவம் சர்ச்சையானது இதற்கு பார்த்திபன் வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து சர்ச்சைகள் இணையத்தில் அதிகம் பரவி வந்த நிலையில் இதுபற்றி பார்த்திபன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் ரோபோ சங்கருக்கு முத்தம் கொடுத்துவிட்டு 'மைக்கை கண்டுபிடித்தவரின் பெயர் எமிலி பெர்லினார், மைக்கை பிடிக்காமல் விட்டவர் ரோபோ சங்கர், மைக்கால் பிடிபட்டவர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் முடிவில் முத்தமிட்டவர்' என பதிவிட்டு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.