கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்த பார்த்திபனின் 'இரவின் நிழல்'
கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கி நடித்த 'இரவின் நிழல்' திரைப்படம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கி நடித்த 'இரவின் நிழல்' திரைப்படம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரான்ஸில் 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் பல நாட்டுத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன, இந்தியாவில் இருந்தும் பல திரைப்பட நடிகர்கள் கேன்ஸ் திரை விழாவில் பங்கேற்பதற்காக சென்றுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள 'இரவின் நிழல்' திரைப்படம் நேற்று முன்தினம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது, 100 நிமிடங்கள் ஓடக் கூடிய 'இரவின் நிழல்' படம் முழுவதும் ஒரே ஷாட்டில் எடுத்து முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் எடுக்கப்பட்ட விதம் குறித்து ஹாலிவுட் உலகத்தினர் மிகுந்த ஆச்சர்யமடைந்தனர். ராதாகிருஷ்ணன் பார்த்திபன் 'இரவின் நிழல்' திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்பு கவனம் பெற்றது மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.