'எனக்கு தெலுங்கு திரையுலகம் மட்டுமே போதுமே' - மகேஷ் பாபு
'தெலுங்கில் மட்டுமே எப்பொழுதும் நடிக்க ஆசை அதை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பார்த்து ரசிக்கட்டும்' என மகேஷ்பாபு கூறியுள்ளார்.

'தெலுங்கில் மட்டுமே எப்பொழுதும் நடிக்க ஆசை அதை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பார்த்து ரசிக்கட்டும்' என மகேஷ்பாபு கூறியுள்ளார்.
திரையுலகில் தற்போது பான் இந்தியா படம் என்ற ஒரு புதிய கோணம் உருவாகி உள்ளது இதன் மூலம் நடிகர்கள் ஒரு படமாவது pan-india படம் அதாவது இந்தியா முழுவதும் சென்று சேரக்கூடிய படத்தை கொடுத்து விட வேண்டும் என முயற்சித்து வரும் நிலையில், தெலுங்கிலிருந்து ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், பிரபாஸ், ராம்சரண் ஆகியோர் இந்திய அளவில் ரசிகர்களிடம் பிரபலமாகிவிட்டனர், மேலும் கன்னட திரையுலகில் இருந்து இந்திய அளவில் ரசிகர்களிடம் யஷ் மிகவும் பிரபலமாகி விட்டார். இந்த நிலையில் இதுகுறித்து 'சர்க்காரு வாரி பட்டா' படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய மகேஷ்பாபு கூறும்போது, 'தெலுங்கில் மட்டுமே எப்பொழுதும் நடிக்க ஆசை' எனக் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், 'பாலிவுட்டில் என்னை ஏற்க மாட்டார்கள் அதனால் தான் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை இங்கு தெலுங்கில் எனக்கு கிடைக்கும் அன்பு, நட்சத்திர அந்தஸ்து ஆகியவை நிறைவாக கிடைக்கும் போது வேறு திரையுலகத்திற்கு செல்லும் எண்ணம் இல்லை' எனவும் தன்னடக்கத்துடன் தெரிவித்துள்ளார்.