Kathir News
Begin typing your search above and press return to search.

பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது: ராணுவ வாகனத்தில் உடல் எடுத்து செல்லப்படுகிறது!

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மும்பையில் காலமானார். அவருக்கு 92 வயதாகிறது. அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என மகாராஷ்டிரா அரசு கூறியிருந்தது. மேலும், மத்திய அரசு இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கூறியிருந்தது.

பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது: ராணுவ வாகனத்தில் உடல் எடுத்து செல்லப்படுகிறது!

ThangaveluBy : Thangavelu

  |  6 Feb 2022 12:18 PM GMT

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மும்பையில் காலமானார். அவருக்கு 92 வயதாகிறது. அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என மகாராஷ்டிரா அரசு கூறியிருந்தது. மேலும், மத்திய அரசு இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கூறியிருந்தது.

இந்நிலையில், மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் உடல் ராணுவ வாகனத்தில் வைத்து இறுதி மரியாதை செய்வதற்காக மும்பை சிவாஜி பார்க் பகுதிக்கு எடுத்து செல்லப்படுகிறது. அதன்படி லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம் மும்பை பிரபுகஞ்சில் இருந்து தொடங்கியுள்ளது. இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வழியனுப்பி வருகின்றனர்.

Source, Image Courtesy: ANI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News