சாலையோர இட்லி கடைக்காரருக்கு 'தல அஜித்' கொடுத்த இன்ப அதிர்ச்சி!
சாலையோர இட்லி கடைக்காரருக்கு 'தல அஜித்' கொடுத்த இன்ப அதிர்ச்சி!
By : Amritha J
தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், அதிக ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவர் அந்த வகையில் விளம்பரமின்றி பல உதவிகள் செய்திருக்கிறார் என்றும் அவர் செய்த உதவிகள் பல வருடங்கள் கழித்துதான் சமூக வலைதளங்கள் மூலம் வெளியே தெரிய வருகிறது.
அந்த வகையில் தற்போது 'வலிமை' படத்தின் படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்ற போது சாலையோர இட்லி கடைகாரர் ஒருவருக்கு தல அஜித் இன்ப அதிர்ச்சி கொடுத்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஐதராபாத்தில் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு நடந்த போது தற்செயலாக அவர் சாலையோரத்தில் இருந்த இட்லி கடை ஒன்றில் சாப்பிட்டுள்ளார். அந்த கடையில் அவர் சில நாட்கள் சாப்பிட்ட நிலையில், அஜித் அவரிடம் பேச்சுக் கொடுத்த போது அவருடைய குழந்தைகள் படிப்பிற்காக அவர் பணம் சேர்ப்பதற்காக கஷ்டப்படுவதை அறிந்துள்ளார்.
ஐதராபாத்தில் வலிமை படத்தின் படப்பிடிப்பு நடந்த போது தற்செயலாக அவர் சாலையோரத்தில் இருந்த இட்லி கடை ஒன்றில் சாப்பிட்டுள்ளார். அந்த கடையில் அவர் சில நாட்கள் சாப்பிட்ட நிலையில், அஜித் அவரிடம் பேச்சுக் கொடுத்த போது அவருடைய குழந்தைகள் படிப்பிற்காக அவர் பணம் சேர்ப்பதற்காக கஷ்டப்படுவதை அறிந்துள்ளார்.
உடனடியாக அந்த இட்லி கடைக்காரரின் குழந்தைகள் படிப்பிற்காக ரூபாய் ஒரு லட்சம் நன்கொடை கொடுத்ததாகவும், இந்த இன்ப அதிர்ச்சியால் மகிழ்ச்சி அடைந்த அந்த இட்லி கடைக்காரர் அஜித்துக்கு நன்றி தெரிவித்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தல அஜித் மனிதநேயத்துடன் செய்த இந்த உதவியை அஜித்தின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.