சுற்றுச்சூழல், சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவர்.. நடிகர் விவேக் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்.!
காமெடி நடிகர் விவேக் மாரடைப்பால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் திரைத்துறையை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

காமெடி நடிகர் விவேக் மாரடைப்பால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் திரைத்துறையை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நடிகர் விவேக் மரணத்திற்கு பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரபல நடிகர் விவேக்கின் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது நகைச்சுவை மற்றும் புத்திசாலித்தனமான வசனங்கள் மக்களை மகிழ்வித்தன. அவரது படங்கள் மற்றும் வாழ்க்கையிலும் சுற்றுச்சூழல் மற்றும் சமுதாயத்தின் மீது மிகுந்த அக்கறையுடன் இருந்தார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைத்துரையை சேர்ந்தவர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். ஓம் சாந்தி.. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.