காவல்துறை உங்கள் நண்பன் படத்தை வாங்கிய வெற்றிமாறன்.!
காவல்துறை உங்கள் நண்பன் படத்தை வாங்கிய வெற்றிமாறன்.!

காவல்துறை உங்கள் நண்பன் என்ற படத்தில் சுரேஷ், ரவீனா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் வாங்கியுள்ளார். இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இவர் ஏற்கனவே லாக்கப் நாவலை மையமாக வைத்து விசாரணை என்ற படத்தை உருவாக்கினார். இந்தப்படம் லாக்கப்பில் கைதிகள் எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள் என்பன பற்றி துள்ளியமாக காண்பிக்கப்பட்டது. இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.
இந்நிலையில், காவல்துறை கதைக்களம் கொண்ட ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தை வாங்கியுள்ளார். இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. காவல்துறை தனது அதிகாரத்தை எப்படி எல்லாம் பயன்படுத்துகிறார்கள் பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பன இப்படத்தில் இருக்கும் என்று தெரிகிறது. தமிழகம் முழுவதும் இப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று தெரிகிறது.