ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று 'வலிமை' படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட போனிகபூர்!
#ValimaiUpdate

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக நடந்து வரும் நிலையில் இன்றுடன் இந்த படத்தின் உள்நாட்டு படப்பிடிப்பு முடிவடைவதாகவும், இதனை அடுத்து வெளிநாட்டில் ஒரே ஒரு ஸ்டன்ட் காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டிய நிலை உள்ளதாகவும் சமீபத்தில் போனிகபூர் 'போர்ப்ஸ்' என்ற பத்திரிகைக்கு பேட்டி அளித்தபோது கூறியிருந்தார் என்று தகவல் வெளியானது.

எனவே இன்றுடன் உள்நாட்டு படப்பிடிப்பு முடிவடைந்ததினால் ரசிகர்கள் இன்று வலிமை படம் அப்டேட் குறித்த தகவல் இன்று வெளிவரும் என்று அஜீத் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர் அந்தவகையில் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வலிமை குறித்த ஒரு தகவலை பதிவு செய்துள்ளார்.
அதில் எங்களது சிறப்புக்குரிய படமான வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் 'பர்ஸ்ட் லுக் வெளியாகும்'. மேலும் இந்த படம் எங்களுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய ஒரு படம் என்று பதிவு செய்துள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த பதிவை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
Wanakam. Humbled by your love towards our film “Valimai”. Bear with us as we work on presenting the First look soon. It’s in the best interests of the film. #Valimai #ValimaiUpdate #AjithKumar
— Boney Kapoor (@BoneyKapoor) February 15, 2021