Kathir News
Begin typing your search above and press return to search.

பரபர இறுதிக்கட்ட பணியில் பொன்னியின் செல்வன் 2

விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் மணிரத்தினம்

பரபர இறுதிக்கட்ட பணியில் பொன்னியின் செல்வன் 2

Mohan RajBy : Mohan Raj

  |  22 Jan 2023 8:38 AM GMT

விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பிரம்மாண்ட படம் பொன்னியின் செல்வன். இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றது. பொன்னியின் செல்வன் - 2 படத்தின் டீசரை மார்ச் மாதம் 1ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். மேலும் இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாகவும் அதில் இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் தற்போது ஏ. ஆர். ரகுமான் இப்படத்திற்கான பின்னணி இசை அமைக்கும் பணியில் தீவிரமடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News