Kathir News
Begin typing your search above and press return to search.

பொன்னியின் செல்வன் 2 இன்ட்ரோ வீடியோ - சுவாரசிய தகவல்

பொன்னியின் செல்வன் 2 இன்ட்ரோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டு அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது . அதைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்

பொன்னியின் செல்வன் 2 இன்ட்ரோ வீடியோ - சுவாரசிய தகவல்

KarthigaBy : Karthiga

  |  22 April 2023 12:00 PM GMT

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், லைகா நிறுவனம் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக தயாரித்துள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 30 ஆம் தேதி வெளியாகி... பிரமாண்ட ஓப்பனிங் கண்டதோடு, ரசிகர்களின் அமோக வரவேற்போடு, சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஒரு பக்கம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த, விக்ரம், திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலி பாலா ஆகியோர் தீவிர புரோமஷன் பணியில் இறங்கியுள்ளனர்.

அந்த வகையில் கமல்ஹாசனின் கர்ஜனை குரலில் ஒலிக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இன்ட்ரோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். பொன்னியின் செல்வன் கடலில் மூழ்கியதற்கு நந்தினியின் சதியே காரணம் என்று ஆதித்த கரிகாலன் வெறி கொண்டு தன் படையுடன் தஞ்சை நோக்கி விரைந்தார்’ என்று கமல்ஹாசன் 'பொன்னியின் செல்வன் 2, படத்திற்கு அறிமுக உரையில் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News