போஸ்டரே எழுத்து பிழையா? மணிரத்னம் இப்படி செய்யலாமா? - கொதிக்கும் 'பொன்னியின் செல்வன்' நாவல் ரசிகர்கள்
போஸ்டர்களை எழுத்து பிழையுடன் அச்சிட்டுள்ளது பொன்னியின் செல்வன் படக்குழு.

By : Mohan Raj
போஸ்டர்களை எழுத்து பிழையுடன் அச்சிட்டுள்ளது பொன்னியின் செல்வன் படக்குழு.
கல்கி எழுதிய வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகமாக இயக்குனர் மணிரத்தினம் படம் பிடித்து வருகிறார், இந்நிலையில் முதல் பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இதில் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இந்த அறிமுக போஸ்டர்களில் சில எழுத்துப் பிழைகள் உள்ளது 'பொன்னியின் செல்வன்' நாவல் ரசிகர்களை அதிருச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அதுவும் மணிரத்தினம் போன்ற முன்னணி இயக்குனர் இதுபோன்று செய்யலாமா என்று அதிருப்தியும் இழந்துள்ளது.
முதலில் வெளியான விக்ரம் போஸ்டரில் 'ஆதித்த கரிகாலன்' என்பதற்கு பதிலாக 'ஆதித்ய கரிகாலன்' என்று இருந்தது. இன்று வெளியான ஜெயம் ரவி போஸ்டரில் 'அருள்மொழிவர்மன்' என்பதற்கு பதிலாக 'அருண்மொழிவர்மன்' என இருக்கிறது
இப்படி வரலாற்று புதினத்தை படமாக எடுக்கும் பொழுது எழுத்துப் பிழைகளுடன் எடுத்தால் எவ்வாறு ரசிகர்கள் பொறுத்துக் கொள்வார்கள் என்ற கேள்வியும் இழந்துள்ளது மேலும் போஸ்டரிலேயே இவ்வாறு தவறுகள் நடக்கிறது என்ன படம் எந்த அளவில் இருக்கும் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
