சிவகார்த்திகேயன் படத்தின் பூஜை: ஷூட்டிங் எத்தனை நாள் தெரியுமா.?
சிவகார்த்திகேயன் படத்தின் பூஜை: ஷூட்டிங் எத்தனை நாள் தெரியுமா.?
By : Amritha J
தமிழ் சினிமாவில் சிறு படங்கள் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அந்தவகையில் தற்போது இவர் நடிக்கும் படம் "டான்". இப்படத்தில் யார் நடிக்க இருக்கின்றனர் என்ற தகவல் கசிந்த வண்ணம் இருந்த நிலையில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் அதனை அடுத்து எஸ்.ஜே சூர்யா, வில்லன் வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வந்தது.
இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் தேர்தெடுக்கப்பட்ட நிலையில் படத்தின் பூஜை இன்று நடந்தது. இந்த பூஜையில் சிவகார்த்திகேயன், படத்தின் கதாநாயகி பிரியங்கா மோகன் மேலும் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, சூரி, குக் வித் கோமாளி ஷிவாங்கி, காளி வெங்கட், முனிஸ்காந்த், ஆர்.ஜே.விஜய் என பலர் நடிக்க உள்ளனர்.
இந்த திரைப்படத்தை 45 முதல் 60 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர். அதன் பிறகு 2 மாதங்களில் புரோடக்ஷன் பணிகளை முடித்துவிட்டு இந்த ஆண்டு இறுதியில் ரீலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
@tuneyjohn #Munishkanth #Shivaangi pic.twitter.com/bme1VcZx1O
— Lyca Productions (@LycaProductions) February 11, 2021