Kathir News
Begin typing your search above and press return to search.

விஜய் தேவரகொண்டா அம்மா நடத்திய பூஜை - எதற்கு தெரியுமா?

'எனக்காக என் அம்மா பூஜை நடத்தினார்' என விஜய் தேவரகொண்டா கூறியது இணையத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

விஜய் தேவரகொண்டா அம்மா நடத்திய பூஜை - எதற்கு தெரியுமா?

Mohan RajBy : Mohan Raj

  |  19 Aug 2022 6:51 AM GMT

'எனக்காக என் அம்மா பூஜை நடத்தினார்' என விஜய் தேவரகொண்டா கூறியது இணையத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.




இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் 'லைகர்', இப்படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது.




இந்நிலையில் விஜய் தேவரகொண்டா தனது சமூக வலைதள பக்கத்தில், 'ஏற்கனவே இந்த மாதம் முழுவதும் இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டேன் ஆனால் அம்மா எங்களுக்கு பாதுகாப்பு தேவை என சிறு பூஜை நடத்தினர், இப்போது நாங்கள் எங்களது பயணத்தை தொடர்கிறோம், எங்கள் அம்மா நிம்மதியாக இருப்பார்' என குறிப்பிட்டு சில படங்களை பயந்துள்ளார். இந்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News