Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரியில் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம் !

பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இயக்குநர் கல்யாண் அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில் புதிய படத்தை இயக்க உள்ளார்.

புதுச்சேரியில் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம் !

ThangaveluBy : Thangavelu

  |  6 Aug 2021 10:25 AM GMT

பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இயக்குநர் கல்யாண் அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில் புதிய படத்தை இயக்க உள்ளார்.


இதே நிறுவனம் நடிகை நயன்தாரா நடிக்கவிருக்கும் இரண்டு புதிய படங்களைத் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் குலேபகாவலி படத்தில் காமெடியில் கவனம் ஈர்த்த இயக்குநர் கல்யாண் தற்போது பிரபுதேவாவுடன் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், தற்போது தயாரிக்கப்படும் படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று புதுச்சேரியில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் நகைச்சுவை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

சௌர்ஸ் :Puthiyathalamurai.

Image Courtesy: Puthiyathalimurai

https://www.puthiyathalaimurai.com/newsview/112092/The-shooting-of-the-film-starring-Prabhu-Deva-and-Aishwarya-Rajesh-has-started-in-puducherry

Next Story
கதிர் தொகுப்பு
Trending News