Kathir News
Begin typing your search above and press return to search.

'காட்பாதர்' சிரஞ்சீவியுடன் சல்மான் கானை நடனம் ஆடவைக்கும் பிரபுதேவா

காட்பாதர் படத்தில் நடிகர் சிரஞ்சீவி மற்றும் சல்மான் கான் இணைந்து நடனமாடும் பாடலை பிரபுதேவா இயக்கி வருகிறார்.

காட்பாதர் சிரஞ்சீவியுடன் சல்மான் கானை நடனம் ஆடவைக்கும் பிரபுதேவா

Mohan RajBy : Mohan Raj

  |  3 May 2022 11:30 AM GMT

காட்பாதர் படத்தில் நடிகர் சிரஞ்சீவி மற்றும் சல்மான் கான் இணைந்து நடனமாடும் பாடலை பிரபுதேவா இயக்கி வருகிறார்.




இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் படம் 'காட்பாதர்' இப்படத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார், எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் சிரஞ்சீவியுடன் சல்மான்கான் இணைந்து நடனமாடும் பாடலை இந்தியாவின் மிக முக்கியமான நடன இயக்குனரும், நடிகருமான பிரபு தேவா இயக்கவிருக்கிறார் என்ற தகவலை இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன் தெரிவித்துள்ளார்.





சிரஞ்சீவி மற்றும் சல்மான்கான் இருவரும் இணைந்து திரையில் நடனம் ஆடினால் நன்றாக இருக்கும் என்பதால் இவர்கள் இருவரையும் இணைத்து பாடல் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காட்பாதர் திரைப்படத்தில் நயன்தாரா, இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News