Begin typing your search above and press return to search.
வேலூரில் விலையில்லா விருந்தகம்: விஜய் ரசிகர்கள் அசத்தல்.!
வேலூரில் விலையில்லா விருந்தகம்: விஜய் ரசிகர்கள் அசத்தல்.!

By :
வேலூரில் நடிகர் விஜய் ரசிகர்கள் விலையில்லா விருந்தகம் ஒன்றை திறந்துள்ளனர். இந்த விலையில்லா உணவகத்தில் அனைவருக்கும் இலவசமாக உணவு அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
நடிகர் விஜயின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ‘விலையில்லா விருந்தகம்’ என்று துவங்கியுள்ளனர்.
இந்த உணவகம் விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் துவங்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் காலை 7.00 மணி முதல் 8.30 மணி வரை விலையில்லா உணவுகள் வழங்கப்படும் என கூறியுள்ளனர். இந்த விலையில்லா உணவகம் திறப்பை வேலூர் பகுதியினர் பாராட்டி வருகின்றனர்.
நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை விடுத்து இது போன்று பொதுமக்களின் நலனில் அக்கறை செலுத்தினால் அனைவருக்கும் நன்மை தரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
Next Story