Begin typing your search above and press return to search.
வசந்த பாலன் படத்தில் ஹீரோவாகும் கைதி பட வில்லன்!
வசந்த பாலன் படத்தில் ஹீரோவாகும் கைதி பட வில்லன்!
By : Amritha J
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் வசந்த பாலன். இவர் ஆல்பம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, அதன்பின் இவர் இயக்கிய வெயில் என்ற திரைப்படம் தேசிய விருதை பெற்றது. மேலும் அரவான், காவியத்தலைவன், அங்காடி தெரு ஆகிய படங்களை இயக்கிய வசந்த பாலன் தற்போது ஜிவி பிரகாஷ் நடித்த ஜெயில் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்து உள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவும் உள்ளது.
அந்த வகையில் வசந்த பாலன் ஏற்கனவே ட்விட்டர் பக்கத்தில் நற்செய்தி என்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் அடுத்த படத்தில் விருதுநகரில் அவர் படித்த பள்ளி நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இந்த நிறுவனத்தின் முதல் படம் குறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.

இந்நிலையில் இப்படத்தில் நாயகனாக அர்ஜுன் தாஸ் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜுன் தாஸ் நடிகர் கார்த்திக் நடித்த கைதி படத்தில் வில்லனாக நடித்தவர் என்பதும் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
நாயகன் pic.twitter.com/h49MwBw9jp
— Vasantabalan (@Vasantabalan1) February 12, 2021
Next Story