ராஜபுத்திரர்களை இணைத்து இஸ்லாமிய படையெடுப்பை எதிர்த்து போராடிய 'ப்ரிதிவிராஜ்' தமிழிலும் வருகிறது
'ப்ரிதிவிராஜ்' டிரைலர் தமிழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

'ப்ரிதிவிராஜ்' டிரைலர் தமிழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
அக்ஷய்குமார், சஞ்சய்தத், சோனு சூட் நடிப்பில் டாக்டர் சந்திரபிரகாஷ் திரிவேதி இயக்கத்தில் சங்கர் இஷான் லாய் இசையமைப்பில் உருவாகியுள்ள படம் பிரித்திவிராஜ். 1179'ம் ஆண்டில் தில்லிக்கு அரசனாக தனது 13வது வயதில் ஆட்சிக்கு வந்த பிரிதிவிராஜ் சவுகான் இஸ்லாமிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக ராஜபுத்திரர்களை ஒன்றிணைத்து போராடியவர். மேலும் இஸ்லாமிய மன்னர்களை எதிர்த்து போரிட்ட கடைசி இந்து மன்னன் இவரே, ஆப்கானிய மன்னர் கோரி முகமதை 1191'ம் ஆண்டு நடந்த போரில் தோற்கடித்தார் இவரது வீர வரலாறு தற்போது படமாக எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் பிரித்திவிராஜ் அக்ஷய் குமார் நடித்துள்ள மேலும் சஞ்சய்தத் கோரி முகம்மது கதாபாத்திரத்தில் நடிக்க இப்படத்தின் டிரைலர் தமிழிலும் வெளியாகியுள்ளது. படம் ஜூன் 3'ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.