தெலுங்கில் அறிமுகமாகும் பிரியா பவானி ஷங்கர்
தமிழிலிருந்து தெலுங்கு பக்கம் செல்பவர்களை விட தமிழ் சினிமாவில் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வரும் கதாநாயகிகள் தான் அதிகமாக இருப்பார்கள்.
By : Mohan Raj
தமிழிலிருந்து தெலுங்கு பக்கம் செல்பவர்களை விட தமிழ் சினிமாவில் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வரும் கதாநாயகிகள் தான் அதிகமாக இருப்பார்கள். ஆனால் தற்போது பிரியா பவானி சங்கர் தமிழில் மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . கடந்த ஆறு வருடங்களில் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட வெற்றி படங்களின் நடித்திருக்கிறார்.
தெலுங்கில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக அறிமுகமாகும் அனில் குமார் இயக்கத்தில் கல்யாணம் கமநீயம் என்ற படம் ஜனவரி 14ஆம் தேதி இந்த வாரம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இருப்பினும் தமிழில் பத்து தலை, அகிலன், ருத்ரன், டமாண்டி காலனி, பொம்மை, இந்தியன் 2 என பிசியாக நடித்து வருகிறார் பிரியா பவானி சங்கர்.
இந்தக் கல்யாணம் கமநீயம் என்ற தெலுங்கு படத்திற்கு சந்தோஷம் கதாநாயகனாக நடித்துள்ளார். டோலிவுட்டில் சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது தமிழைப் போலவே தெலுங்கிலும் பிரியா பவானி சங்கர் வரவேற்பை பெறுவார் என எதிர்பார்க்கிறார்கள்.