அமெரிக்கா செல்வதில் சிக்கல்.. சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் செல்லும் ரஜினி.. எதற்கு தெரியுமா.?
அமெரிக்கா செல்வதில் சிக்கல்.. சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் செல்லும் ரஜினி.. எதற்கு தெரியுமா.?
By : Kathir Webdesk
சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்த் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்ற காரணத்தினால் அவர் பிழைத்தார் என்று அப்போதைய செய்தியாக வெளிவந்தது. இதன் காரணமாகவே விஜயகாந்துக்கும் அந்த மருத்துவமனையை பரிந்துரைத்தார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011க்கு பிறகு சரியாக 10 ஆண்டுகளுக்கு கழித்து தற்போது 2021ல் மீண்டும் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லவுள்ளார் ரஜினி என்று தகவல் வெளியாகியுள்ளது.
ரத்த அழுத்தம் காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்ற நிலையில், தற்போது சென்னையில் ஓய்வெடுத்து வருகிறார். ஆனால், அவர் கட்சி தொடங்கப்போவதில்லை என்று சொல்லிவிட்டதால் கிண்டல் செய்வோர் ஒருபுறமிருக்க அவரது ரசிகர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மன உளைச்சலில் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தாக தெரிகிறது. இதனை எல்லாம் கவனித்து வந்த ரஜினிக்கு மீண்டும் மன சோர்வு அதிகம் ஏற்பட்டிருக்கிறதாம்.
இதனால் அவரின் உடல்சோர்வுக்கு சிகிச்சையும், மன சோர்வுக்கு ஓய்வும் அளிக்க முடிவு எடுத்துள்ளார்களாம் குடும்பத்தினர். ரஜினியை அமெரிக்கா அழைத்துச்செல்ல முடிவெடுத்துள்ளனர் அவரது குடும்பத்தினர்.
ஆனால், மீண்டும் கொரோனா அதிகமாக பரவியதால் அங்கு செல்வதில் சிக்கல் இருப்பதை உணர்ந்து ரஜினியை சிங்கப்பூர் அழைத்து சென்று மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து சிங்கப்பூரிலேயே ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கி மனச்சோர்வு நீங்குவதற்காக ஓய்வு எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகிறது.