Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி நேர பரபரப்பு நிமிடங்கள்!

நடிகர் புனித் ராஜ்குமார் தனது மனைவி அஸ்வினியுடன் (அக்டோபர் 29) காலை 10.30 மணியளவில் எனது மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு வியர்வை அதிகப்படியாக இருந்தது. ஏன் வியர்வு அதிகமாக இருக்கிறது என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் நான் இப்போதுதான் உடற்பயிற்சி கூட்டத்தில் பயிற்சி முடித்துவிட்டு நேராக வருகிறேன். இதன் காரணமாக வியக்கிறது. ஆனால் எனக்கு உடல் மிகவும் சோர்வாக உள்ளது. என்வென்று தெரியவில்லை எனக் கூறினார்.

நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி நேர பரபரப்பு நிமிடங்கள்!

ThangaveluBy : Thangavelu

  |  31 Oct 2021 6:45 AM GMT

நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த 29ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு கர்நாடக மக்களிடம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. அவரது கடைசி நேர பரபரப்பு நிமிடங்கள் குறித்து அவர்களின் குடும்ப மருத்துவர் ரமண ராவ் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

நடிகர் புனித் ராஜ்குமார் தனது மனைவி அஸ்வினியுடன் (அக்டோபர் 29) காலை 10.30 மணியளவில் எனது மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு வியர்வை அதிகப்படியாக இருந்தது. ஏன் வியர்வு அதிகமாக இருக்கிறது என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் நான் இப்போதுதான் உடற்பயிற்சி கூட்டத்தில் பயிற்சி முடித்துவிட்டு நேராக வருகிறேன். இதன் காரணமாக வியக்கிறது. ஆனால் எனக்கு உடல் மிகவும் சோர்வாக உள்ளது. என்வென்று தெரியவில்லை எனக் கூறினார்.

இதுவரை அவர் எப்போதும் உடல் சோர்வாக இருக்கிறது என்று கூறி தன்னிடம் வந்தது கிடையாது. முதன் முறையாக அவர் என்னிடம் இது போன்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக அவருக்கு இ.சி.ஜி., (இதயத்துடிப்பு) பரிசோதனை செய்தேன். அதில் அவரது இதய செயல்பாட்டில் சிறிது மாறுபாடு இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பவில்லை. உடனடியாக புரிந்து கொண்ட நான், உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற அறிவுறுத்தி«ன்.

இதற்காக முன்கூட்டியே ஒரு மருத்துவ குழுவை தயார் நிலையில் இருக்கும்படி விக்ரம் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தேன். அடுத்த 5 நிமிடத்தில் அவர் விக்ரம் மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு அப்போதுகூட ஏற்பட்டது மாரடைப்பு கிடையாது. மாரடைப்பு ஏற்பட்டால் அதிகமான வலி ஏற்படும். ஆனால் அவருக்கு வலி இருக்கவில்லை. ''கார்டியாக் அரெஸ்ட்'' அதாவது சொல்ல வேண்டும் என்றால் அவரின் இதய துடிப்பே நின்றுபோவது. அதுதான் அவருக்கு ஏற்பட்டது. அவர் சாதாரண நபர் இல்லை. தினமும் உடற்பயிற்சி செய்வது மற்றும் நடைபயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டவர். உடல் ஆரோக்கியத்தில் தனிக்கவனம் செலுத்தினார். இது போன்ற பிரச்சனை அவருக்கு இருக்கும் என்று யாரும் நினைத்து பார்த்தில்லை.

மேலும், எங்கள் மருத்துவமனையில் அவர் மயங்கி விழவில்லை. பரிசோதனையின் போது, அவரது இதய துடிப்பு மிகவும் சரியாகவே இருந்தது. பரிசோதனைக்கு பின்னர் அவர் நடக்க சிரமப்பட்டார். என்னிடம் பேசும்போது சரியாக பேசினார். காரில் அழைத்து செல்லுமாறு கூறினேன். காரில் செல்லும்போது தான் அவருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக உணர்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Daily Thanthi

Image Courtesy:Times Of India

Next Story
கதிர் தொகுப்பு
Trending News