Kathir News
Begin typing your search above and press return to search.

புனித் ராஜ்குமார் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடும் கன்னட திரையுலகம்

கேஜிஎப், 777 சார்லி, விக்ராந்த் ரோணா, காந்தாரா என பிரம்மாண்டமான படைப்புகள் கன்னட திரை உலகில் இருந்து வெளியாகி, வசூலில் கோடிக்கணக்கான வசூலை குவித்து வருவதால்

புனித் ராஜ்குமார் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடும் கன்னட திரையுலகம்
X

Mohan RajBy : Mohan Raj

  |  26 Jan 2023 12:28 PM GMT

கேஜிஎப், 777 சார்லி, விக்ராந்த் ரோணா, காந்தாரா என பிரம்மாண்டமான படைப்புகள் கன்னட திரை உலகில் இருந்து வெளியாகி, வசூலில் கோடிக்கணக்கான வசூலை குவித்து வருவதால் கன்னட திரை உலகின் மீது ஒட்டுமொத்த இந்திய திரை உலகின் கவனம் தற்போது திரும்பி இருக்கிறது. சில பெரிய பட்ஜெட் படங்களான பான் இந்தியா படங்களை கன்னட சினிமாவின் மார்க்கெட் தளம் விரிவடைந்து இருப்பதால் அங்கு தைரியமாக உருவாக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் கன்னடத் திரையுலகின் முன்னாடியே இயக்குனரான ஆர். சந்துரு இயக்கத்தில் தற்போது 'கப்ஜா' படம் தயாராகி வருகிறது. இப்படத்தை ஸ்ரீ சத்தேஸ்வரா என்டர்பிரைசஸ் என்னும் பட நிறுவனம் சார்பில் ஆர் சந்திரசேகர் தயாரித்திருக்கிறார். கேங்ஸ்டர் வித் ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகியுள்ளது. இதில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும் அவர்களுடன் இணைந்து ஸ்ரேயா சரண், முரளி ஷர்மா, சுதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கேஜிஎப் படப்புகழ் ரவி பஸ்ரூட் இசையமைத்திற்கும் இப்படத்திற்கு அர்ஜுன் செட்டி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். 1947 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படுகிறார் அவருடைய மகன் தவிர்க்க முடியாத காரணங்களால் மாபியா உங்களிடம் சிக்கிக் கொள்கிறார். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை விறுவிறுப்பாக சொல்லும் படமாக இப்படம் இருக்கும் என்று இயக்குனர் கூறியுள்ளார்.

தி ரைஸ் கேங்ஸ்டர் இன் இந்தியா என்னும் டாக் லைனும் இப்படத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது. என்ற மார்ச் 14 17ஆம் தேதி புனித் ராஜ்குமார் பிறந்த நாளில் இப்படம் வெளியாகிறது என்றார் மற்றும் இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு குற்ற சம்பவங்களுக்கான சட்டவிரோத நிழல் உலக தாத்தாக்கள் உருவான வரலாற்றை இதில் பேசியிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News