Kathir News
Begin typing your search above and press return to search.

சரவெடி சத்தம்.. விசில் பறக்க வெளியான சூப்பர் ஸ்டாரின் 'அண்ணாத்த' ட்ரெய்லர்!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் ரஜினியுடன், நடிகைகள் நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ், மற்றும் நடிகர்கள் சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ் உள்ளிட்டோர்கள் நடித்துள்ளனர். அதே போன்று படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

சரவெடி சத்தம்.. விசில் பறக்க வெளியான சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த ட்ரெய்லர்!

ThangaveluBy : Thangavelu

  |  28 Oct 2021 2:21 AM GMT

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் ரஜினியுடன், நடிகைகள் நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ், மற்றும் நடிகர்கள் சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ் உள்ளிட்டோர்கள் நடித்துள்ளனர். அதே போன்று படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இதனிடையே படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. அண்ணாத்த வருகின்ற தீபாவளி அன்றி வெளியாகிறது. தெலுங்கு மொழியில் பெத்தண்ணா என்ற பெயரிலும் வெளியாகிறது. இதனிடையே அண்ணாத்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள், டீஸர்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.


இந்நிலையில், அண்ணாத்த படத்தின் டிரெய்லர் நேற்று (அக்டோபர் 27) வெளியாகியது. அதில் ரஜினி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, முறுக்கு மீசையுடன் மிகவும் ஸ்டைலாக வலம் வருகிறார். இதனை கண்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

Source, Image Courtesy: Social Media


Next Story
கதிர் தொகுப்பு
Trending News