ரஜினி-கமல் காம்போ கதை தயார் - அதிரடியாய் அறிவித்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்
ரஜினி, கமல் இணைந்து நடிக்க கதை தயார் என இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அறிவித்துள்ளார்.

ரஜினி, கமல் இணைந்து நடிக்க கதை தயார் என இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அறிவித்துள்ளார்.
மலையாளத்தில் மிகப்பெரும் வெற்றி அடைந்த பிரேமம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்த அல்போன்ஸ் புத்திரன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு பிரித்திவிராஜ், நயன்தாரா நடிக்கும் 'கோல்ட்' படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது என் லட்சியம் என அடிக்கடி கூறும் அல்போன்ஸ் புத்திரன் தற்போது ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் வகையிலான கதை தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, 'கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் பொருந்தும் கதையை தயார் செய்து வைத்துள்ளேன், அந்த கதை நிச்சயம் இருவருக்கும் பிடிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் எனக்கு அதிர்ஷ்டம் இல்லாததால் இன்னும் என் வாழ்நாளில் இருவரையும் ஒருமுறை கூட சந்திக்க வில்லை எதிர்காலத்தில் கமல்ஹாசன், ரஜினி ஆகிய இருவரையும் சந்திக்க நேரிட்டால் அவர்களிடம் இந்தக் கதையைக் கூறி அது அவர்களுக்கு பிடித்துவிட்டால் முழுத்திறமையும் இந்தப் படத்தில் பயன்படுத்தி நல்லதொரு பொழுதுபோக்கு படமாக எடுப்பேன் என அறிவித்துள்ளார்.