மருத்துவர்கள் அறிவுறைப்படி முழு ஓய்வில் ரஜினி.. 31ம் தேதி கட்சி அறிவிப்பு வெளியாகுமா?
மருத்துவர்கள் அறிவுறைப்படி முழு ஓய்வில் ரஜினி.. 31ம் தேதி கட்சி அறிவிப்பு வெளியாகுமா?
By : Kathir Webdesk
ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக அனுமதிக்கப்பட்டார். இன்று மாலையில் டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவமனை நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.
நேற்றைக்கு இருந்ததைவிட உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிவதால் அப்பல்லோ நிர்வாகம் இந்த முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம் ரத்தம் அழுத்தம் இன்னமும் அதிகமாகத்தான் இருக்கிறது என்றும் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. ரத்தம் அழுத்தம் காரணமாக சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் தற்போது ரத்த அழுத்தம் சீராகியுள்ளதால் டிஸ்சார்ஜ் செய்துவிட ஆலோசித்து வருகின்றனர்.
இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்துள்ளார்.
பரிசோதனையில் கொரோனா இல்லை என்றாலும் முழு ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்த் யாரையும் பார்க்க கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், வருகின்ற 31ம் தேதி கட்சி அறிவிப்பு என்று ரஜினி சொல்லியிருந்த நிலையில் முழு ஓய்வு, அதிலும் தனிமை ஓய்வு என்பதால் கட்சி அறிவிப்பு இப்போதைக்கு வெளியிட வாய்ப்பில்லை என்று அவரது நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், அண்ணாத்த படத்தின் செட் போடும்போதே, சிலருக்கு கொரோனா இருந்ததால் தற்போதைக்கு அண்ணாத்த படத்தின் இறுதி பணிகள் முடிவடைய பல மாதங்கள் ஆகலாம் என்கிறது படக்குழு.