ரஜினி இல்லைனா என்ன.. என் மகன் இருக்கிறார்..? எஸ்.ஏ.சந்திரசேகரின் காமெடி.!
ரஜினி இல்லைனா என்ன.. என் மகன் இருக்கிறார்..? எஸ்.ஏ.சந்திரசேகரின் காமெடி.!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடவில்லை இன்று அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டார். இவரது அறிவிப்புக்கு பலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு காமெடியான தகவலை தெரிவித்துள்ளார்.
கடந்த 1996ம் ஆண்டு முதல் அரசியலுக்கு வருவதாக தெரிவித்து வந்த ரஜினி, ஜனவரி மாதம் கண்டிப்பாக கட்சி தொடங்கப்படும் என உறுதியளித்திருந்தார். ஆனால் கொரோனா தொற்று காரணமாகவும், தன்னுடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரவில்லை என்றும், கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாததற்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் வெளிப்படையாக மன்னிப்புக்கேட்டு கொள்வதாகவும் தெரிவித்தார்.
ரஜினியின் இந்த முடிவு ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களுக்கு மிகுந்த பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றே கூறலாம். இந்நிலையில், நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தனியார் இணையதள செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ரஜினியின் ரசிகராக அவர் அரசியலுக்கு வராததை நான் நல்லது என்று நினைக்கிறேன்.
அரசியலுக்கு வரவில்லை என்றாலும், அவர் நடிப்பில் கவனம் செலுத்தி நல்லபடியாக இருக்க வேண்டும். அரசியலுக்கு வந்துதான் நடிகர்கள் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணமில்லை. தற்போது அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்பவில்லை என்றாலும், பல இளைஞர்கள் இருக்கின்றனர். பதவி, பணத்தின் மீது ஆசையில்லாத இளைஞர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலுக்கு வர வேண்டும் எனக் கூறினார்.
அவர் நடிகர் விஜயை வெளிப்படையாக சொல்லாமல் நாசுக்காக சொல்வது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இவர் கடந்த மாதம் கட்சி தொடங்கி 2வது நாளே கட்சியை டிஸ்மிஸ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.