Kathir News
Begin typing your search above and press return to search.

ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு.. திடீர் உத்தரவால் ரசிகர்கள் அதிர்ச்சி.!

நடிகர் ரஜினிகாந்த் தனது பெயரில் இயங்கும் மக்கள் மன்றத்தை கலைத்து அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு.. திடீர் உத்தரவால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
X

ThangaveluBy : Thangavelu

  |  12 July 2021 6:29 AM GMT

நடிகர் ரஜினிகாந்த் தனது பெயரில் இயங்கும் மக்கள் மன்றத்தை கலைத்து அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்து அரசியல் குறித்து சில வார்த்தைகள் கூறினார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை.


நான் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாநில அளவிலும், மாவடட் அளவிலும் பல பதவிகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம்.

கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்க தமிழ் மக்கள்! வளர்க தமிழ்நாடு! ஜெய்ஹிந்த்! என குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News