தன்னை காப்பாற்றிய மருத்துவர்கள், ஊழியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொன்ன ரஜினி.!
தன்னை காப்பாற்றிய மருத்துவர்கள், ஊழியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொன்ன ரஜினி.!

கடந்த வாரம் ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த கடந்த டிசம்பர் 15ம் தேதி முதல் ‘அண்ணாத்த’ பட படப்பிடிப்பில் ஐதராபாத்தில் கலந்து கொண்டார். அப்போது யூனிட்டில் உள்ளோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து ரஜினிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் நெகட்டிவ் என்று வந்தாலும் ரத்த அழுத்த மாறுபாட்டின் காரணமாக ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல்நிலையில நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் டிஸ்சார்ஜ் ஆனார்.
இந்நிலையில், தான் அனுமதிக்கப்பட்டிருந்த அப்போலோ நிர்வாகக் குழுவினருக்கு புத்தாண்டு வாழ்த்துகளை வீடியோ மூலமாக தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் கடவுள் அருளால் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். உங்கள் சேவை மிகவும் சிறப்பானதாக இருந்தது என்று கூறியதோடு மருத்துவர்களுக்கும் ஊழியர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைக் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தற்போது இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.