ரஜினிகாந்த் அப்பலோ மருத்துவமனையில் அனுமதி - பதட்டத்தில் ரசிகர்கள்!
ரஜினிகாந்த் அப்பலோ மருத்துவமனையில் அனுமதி - பதட்டத்தில் ரசிகர்கள்!
By : Amritha J
தமிழ் சினிமாவில் தற்போது வரை முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருந்த நிலையில் திடீரென படப்பிடிப்பு குழுவினர் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் தன்னைத்தானே தனிமை படுத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென இன்று ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
இது குறித்து அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 10 நாட்களாக ஐதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் படக்குழுவில் ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ரஜினிகாந்த் கடந்த 22ம் தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அவருக்கு பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டாலும் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனாவின் எந்த அறிகுறியும் இல்லை என்றாலும் ரத்த அழுத்தம் மாறுபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் தற்போது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
அவருடைய ரத்த அழுத்தம் தற்போது நார்மலுக்கு வந்து கொண்டிருக்கின்றது. முழுமையாக அவர் குணமானவுடன் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். ரத்த அழுத்த மாறுபாடு தவிர அவருக்கு வேறு எந்த பிரச்சனைகளும் இல்லை என அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.