Kathir News
Begin typing your search above and press return to search.

மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்!

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதை அறிந்து ரசிகர்கள் மிகவும் சந்தோஷமடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்!
X

ThangaveluBy : Thangavelu

  |  1 Nov 2021 1:56 AM GMT

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதை அறிந்து ரசிகர்கள் மிகவும் சந்தோஷமடைந்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 28ம் தேதி உடல் நல குறைவு ஏற்பட்டத்தை தொடர்ந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறியிருந்தார். அவருக்கு தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தில் கழுத்துப்பகுதியில் பிரச்னை உள்ளதாகவும் அதனை சரி செய்யப்பட்ட பின்னர் நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.

இதனை அறிந்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று கோயில்களில் பிரார்த்தனை செய்து மண் சோறு சாப்பிட்டு தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். அது மட்டுமின்றி தமிழக அரசியல் தலைவர்களும் விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். முதலமைச்சர் ஸ்டாலின் காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பற்றி கேட்டறிந்தார். இந்நிலையில், ரஜினிகாந்த் நேற்று இரவு உடல்நலம் தேறியதை தொடர்ந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். அவருக்கு வீட்டில் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். ரசிகர்களும் அவரது வீட்டின் முன்பு திரண்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Source, Image Courtesy: Dinamalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News