Kathir News
Begin typing your search above and press return to search.

ரஜினியின் 171 வது படம்: இயக்குனர் இவரா? ஏகோபித்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியின் 171 வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ரஜினியின் 171 வது படம்: இயக்குனர் இவரா? ஏகோபித்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
X

KarthigaBy : Karthiga

  |  13 Sept 2023 4:15 PM IST

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது. தற்போது மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் நடித்து முடித்துள்ளார் . அடுத்து சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை இயக்ககி பிரபலமான ஞானவேல் டைரக்டர் செய்யும் படத்தில் நடிக்க உள்ளார். இது உண்மை சம்பவம் கதை அம்சமுள்ள படம் என்றும் ரஜினி போலி என்கவுருக்கு எதிராக போராடும் ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது .


171 வது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது . இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்டர் செய்ய இருப்பதாகவும் ,அனிருத் இசையமைக்கிறார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடிக்கும் இதர நடிகர்கள் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்பொழுது விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்கி வருகிறார் . 171 வது படம் ரஜினிக்கு கடைசி படமாக இருக்கும் என்று வலைதளத்தில் தகவல் பரவியது. ஆனாலும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News