நிஷா சொன்னதைக் கேட்டு கடுப்பாகிய ரம்யா!
நிஷா சொன்னதைக் கேட்டு கடுப்பாகிய ரம்யா!
By : Amritha J
பிக்பாஸ் வீட்டிற்குள் எலிமினேஷன் ஆகி சென்றவர்களான அர்ச்சனா, நிஷா, ரமேஷ் மற்றும் ரேகா ஆகியோர் சிறப்பு விருந்தாளியாக வந்திருக்கும் நிலையில் வீடே கோலாகலமாக உள்ளது. பிக்பாஸ் ஆரம்பித்த முதல் பத்து நாட்கள் நிஷா சூப்பராக விளையாடி கொண்டிருந்த நிலையில் அர்ச்சனாவின் வருகைக்கு பின் அவரது அன்பில் சிக்கி விளையாட்டில் இருந்தே கிட்டத்தட்ட ஒதுங்கிவிட்டார்.
இந்த நிலையில் இன்று சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் நிஷா செம கலக்கு கலக்குகிறார். இதை அவர் வீட்டில் இருக்கும்போது செய்திருந்தால் அவர் தான் டைட்டில் வின்னராக இருந்திருப்பார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.அதேபோல் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு போட்டியாளர்கள் அனைவரும் ஆட்டம் போடுகின்றனர். குறிப்பாக அர்ச்சனாவின் ஆட்டம் அதிகமாக உள்ளது. நீ ஜெயிச்சா எல்லோருக்கும் சந்தோஷம் என்று சோம்சேகரை வாழ்த்திய ரேகா, ஆரியையும் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவிக்கின்றார்.
மொத்தத்தில் அன்பு குரூப் மட்டும் உள்ளே வந்திருந்தாலும், பழைய குரூப்பை ஃபாலோ செய்யாமல் அனைவரிடமும் கலகலப்பாக இருப்பதை பார்க்கும்போது பார்வையாளர்களின் விமர்சனங்களை முழுவதும் படித்து திருந்தியிருப்பார்கள் என்று தோன்றுகிறது.மேலும் ரம்யாவிடம், நிஷா கூறுகையில் வெளியில் சென்ற பிறகு எல்லோரும் என்னிடம் கேட்கும் கேள்வி பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் ஆ என்றும்,சமைக்கர வேலை இல்லை, அனைத்தும் வெளியில் இருந்து சமைத்து வந்துவிடும் என்று நிஷா சொல்ல அதைக்கேட்ட ரம்யா கடுப்பில் யார் அப்படி சொன்னது என்று ஆக்ரோஷமாக கூறுகிறார் என்பது போல ப்ரோமோ முடிந்தது.
#Day99 #Promo2 of #BiggBossTamil#பிக்பாஸ் - திங்கள் - வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/Z0ziQRqZDe
— Vijay Television (@vijaytelevision) January 11, 2021