Kathir News
Begin typing your search above and press return to search.

கமலஹாசனிடம் கஷ்டமாக இருக்கிறது என்று புலம்பிய ரம்யா!

கமலஹாசனிடம் கஷ்டமாக இருக்கிறது என்று புலம்பிய ரம்யா!

கமலஹாசனிடம் கஷ்டமாக இருக்கிறது என்று புலம்பிய ரம்யா!
X

Amritha JBy : Amritha J

  |  16 Jan 2021 6:37 PM GMT

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளை வெற்றியாளர் யார் என்று தெரிய போகும் நிலையில் இன்று ஒரு ட்விஸ்ட் இருக்கிறது என ஏற்கனவே கமல்ஹாசன் தெரிவித்தார். எனவே தற்போது வந்த ப்ரோமோவில் உங்கள் நண்பர்களின் வருகை எப்படி இருந்தது என்று கமல்ஹாசன் கேட்க அதற்கு ரம்யா வெளியில் இருந்து வந்தவர்கள் வெளியில் நடப்பதை சிலவற்றை கூறினார்கள். அதைக் கேட்டு கொஞ்சம் அப்செட் ஆக இருந்தது என்று கூறினார்.

அதன் பின்னர் ரியோ, இங்கு வந்த நிறைய பேர் எங்களை பற்றி கூறியதை கேட்டவுடன் ரொம்ப கஷ்டமாக இருந்தது என்று கூறினார். அப்போது கமல்ஹாசன் எனக்கு உங்கள் முகத்தை பார்க்கும்போது பிடிக்கவே இல்லை. காற்று போன பலூன் போன்று இருக்கின்றீர்கள். வெளியில் வந்தால் உங்கள் முகம் கண்டிப்பாக மலரும். இந்த ஒரு சைடு வேற இருக்கின்றதா தேவையில்லாமல் கவலைப்பட்டு இருந்தோமே என்று நீங்கள் நினைக்க தான் போகிறீர்கள் என்று கூறியவுடன் தான் அனைவருக்கும் சற்றுநிம்மதியும் சிரிப்பும் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மொத்தத்தில் ஆரியை தவிர மற்ற அனைவரும் வீட்டிற்கு வந்த விருந்தினர்களால் கடுமையாக அப்செட் ஆகி உள்ளார்கள் என்பது அவர்களுடைய பேச்சில் இருந்து தெரிய வருகிறது என்பதாகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News