பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சோம் குறித்து மனம் திறந்த ரம்யா!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சோம் குறித்து மனம் திறந்த ரம்யா!
By : Amritha J
பிக்பாஸ் நிகழ்ச்சி 106 நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்று கடந்த மாதம் ஜனவரி 17-ஆம் தேதி முடிவடைந்தது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 50 லட்சத்தை பெற்று ஆரி டைட்டில் வின்னர் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 16 போட்டியாளர்களில் ஒருவர் ஆன ரம்யா, சோம் குறித்து ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காம் சீசனின் இறுதி நாள் வரை சென்ற ஒரே பெண் போட்டியாளர். மேலும் அமைதியா இருந்தாலும், பேச வேண்டிய இடத்தில் தனது கருத்தை கூறி மக்கள் மத்தியில் இடம் பெற்றார்.
பாலாஜி கூறும்போது கூட ஆண்களுக்கு பெண்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் என்று கூறியிருந்தார். எனவே பிக்பாஸிற்கு பின்னர் முதன்முதலாக சமூகவலைத்தளத்தில் நேரடியாக மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
அதில் ரசிகர் ஒருவர் சோம் பற்றி கேட்க, அவர் கூறும் பொழுது சோம் ஒரு நல்ல மனிதர். மிகவும் சிறந்த ஜென்டில்மேன். அனைவர் மேலும் அக்கறை உள்ள ஒரு நபர். டாஸ்க்குகளின் போது சிறந்த முனைப்பை மேற்கொள்பவர். ஆரம்பம் முதல் முடிவு வரைக்கும் டாஸ்க்குகளின் போது சிறந்த முனைப்பு காட்டியவர். கண்டிப்பாக சூப்பராக பிக்பாஸ் கேமை விளையாடினார்.
நிச்சயமாக நான் மற்றவர்களுடன் எப்படி ஒரு நட்புடன் பழகினேனோ அப்படிதான் சோம்முடனும். நீங்கள் திருப்பி திருப்பி கேட்டாலும் அது தான் என்னுடைய பதில். மற்றபடி வேறு எதுவுமே கிடையாது என்று கூறியுள்ளார்.தற்போது இந்த வீடியோ பதிவு வைரல் ஆகி வருகிறது.